முகப்பு /தேனி /

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் திறப்பு!

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் திறப்பு!

X
தேனி

தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் திறப்பு

BJP Head Office Inaugurated in Theni District | தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 இடங்களில் நவீன வசதிகள் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தை காணொளி மூலமாக பாரதி ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பெருங்கோட்ட பொருளாளர் நர்சிங்க பெருமாள், கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் மாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் சௌந்தரராஜன், மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி மற்றும் தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவிற்கு தேனி மாவட்டத்தில் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: BJP, Local News, Theni