முகப்பு /தேனி /

சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் - தேனி கலெக்டர் அறிவிப்பு

சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் - தேனி கலெக்டர் அறிவிப்பு

X
சிறந்த

சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Theni Collector : தமிழ்நாடு அரசின் சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை மூலம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினவிழா அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023ம் ஆண்டில் 15.08.2023 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பதாரரின் உயிர் தரவு, (Bio Data) சுயசரிதை (ம) பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 (Passport Size Photo), ஒரு பக்கம் தனியரைப் பற்றிய விவரம் தமிழ் (ம) ஆங்கிலம் (தமிழில் -மருதம் எழுத்துருவில் (ம) ஆங்கிலம் - Arial எழுதருவில்) இருத்தல் வேண்டும்.

தேனி கலெக்டர் அலுவலகம்

இதையும் படிங்க : ஆண்டுக்கு ஒருமுறை தான் காட்டுக்குள் அனுமதி..! தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் இப்படி ஒரு சிறப்புமிக்க கோயிலா..!

மேலும் தனியரால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கையேட்டில் தேசிய விருதுகளின் விபரம், சான்றிதழ்,சேவையை பாராட்டி வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூக சேவையாளரின் / நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், தனது இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த விதிமுறைகளின்படி பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுவதற்கு தகுதி உடைய நபர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, 3ம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய படிவத்தினை பெற்று 10.06.2023-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Theni