Home /theni /

தேனியில் தேனீக்கள் புரட்சி.. சிறிய பாக்கெட்களில் தேன் விற்பனை.. காமாட்சிபுரம் பெண் தொழில்முனைவோர் மையத்தில் புதிய முயற்சி..

தேனியில் தேனீக்கள் புரட்சி.. சிறிய பாக்கெட்களில் தேன் விற்பனை.. காமாட்சிபுரம் பெண் தொழில்முனைவோர் மையத்தில் புதிய முயற்சி..

தேன்

தேன் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு..

Theni Latest News : சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் பெண் தொழில்முனைவோர் உற்பத்தி மற்றும் பயிற்சி மையத்தில், பெண்கள் தேன் உற்பத்தி செய்து அதனை வெளிச்சந்தையில் பிரபலப்படுத்தும் விதமாக சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தேன் தயாரித்து விற்பனை செய்யும் தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தேனியில் முதல்முறையாக சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தேன் தயாரிப்பு செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண்களின் உற்பத்தி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் பெண் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற பயிற்சி அளிப்பதற்கும், பெண் விவசாயிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் யுத்திகளை பெண் விவசாயிகளுக்கு கற்றுத்தரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது பெண்களின் உற்பத்தி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி மையம்.

முதல்முறையாக சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தேன் தயாரிப்பு செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்..


சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், நபார்டு வங்கி இணைந்து தேனி மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, பெட்டி தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு, பெட்டி தேனீ அமைப்பதற்கான மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்பட்டு இருப்பதால் இதன் மூலம் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட பெட்டிகளை வைத்து பெண்கள் பெட்டி தேனீ வளர்ப்பு முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழில்முனைவோர் மையத்தில் புதிய முயற்சி..


பெண் தொழில் முனைவோர்கள் மூலம் தேன் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக தேன் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கும், தேன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு எளிய மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் விதமாக சிறிய பாக்கெட்களில் அடைக்கப்பட்ட தேன் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யும் புதிய யுத்தி பெண்களின் உற்பத்தி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தால் அறிமுகம் செய்யப்பட்டு பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தேன் தயாரிப்பு செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்..


தேனி மாவட்டத்தில் முதல் முறையாக சிறிய பாக்கெட்களில் அடைக்கப்பட்ட தரமான கலப்படமில்லாத தேன் தயார் செய்யப்பட்டு, 10 ml பாக்கெட்டுகளாக தயாராககும் இயந்திரம் மூலமும், உற்பத்தி செய்யப்பட்ட தேனை பதப்படுத்தி விற்பனை செய்யும் தொழில்நுட்பமும் பெண் தொழில்முனைவோருக்கு வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிறிய அளவு பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது சந்தையில் ஆதரவு கிடைக்கும் என்பதால் இந்த முயற்சியானது தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனரான ரம்யா சிவ செல்வி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் பெறவும், தொழில் முனைவோர் பயிற்சி பெற அல்லது ஆலோசனைகள் பெற விரும்பும், தேனி மாவட்ட பெண்கள், தொழில் முனைவோர் பயிற்சி மையத்தை ( 04546) 247 245 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி