ஹோம் /தேனி /

ரூ.20,000 முதல் பரிசு.. போடி அரசுப் பள்ளியில் இரவு பகலாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி..

ரூ.20,000 முதல் பரிசு.. போடி அரசுப் பள்ளியில் இரவு பகலாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி..

X
தேனியில்

தேனியில் கூடைபந்தாட்ட போட்டி

Theni basket ball competition | தேனியில் மாவட்ட அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட அளவில் போடிநாயக்கனூர் பகுதியில் மின் ஒளியில் இரவு பகல் ஆட்டமாக 3 நாட்கள் நடைபெற்ற கூடைப் பந்தாட்ட போட்டியில் 18 அணிகள் கலந்துகொண்டன.

கூடைப் பந்தாட்ட போட்டி :

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் போடி கூடைப் பந்து சங்கத்தினர் சார்பாக மூன்று நாட்கள் இரவு பகல் ஆட்டமாக மின்னொளியில் நடைபெறும் கூடை பந்தாட்ட போட்டி தொடங்கி நடைபெற்றது.

டிசம்பர் 27ம் தேதி தொடங்கி டிசம்பர் 29ம் தேதி வரை தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.

பிபிசி போடி சிட்னி மைதானம் அணி, எல்எஸ்மில் அணி, சில்வர் ஜூப்ளி அணி, கூடலூர் பிரயண்ட், வடுகபட்டி பிபிசி அணிகள் உட்பட 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய இந்த போட்டியில் முதல் இரண்டு நாட்கள் நாக் அவுட் போட்டிகளாக நடைபெற்றது.

இதையும் படிங்க : நண்பனை கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்! தேனியில் பயங்கரம்

நாக்அவுட் போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் வெற்றிபெறும் முதல் அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கோப்பையும் இரண்டாவது அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான முறையில் செயல் திறனை காண்பித்து சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

போடிநாயக்கனூர் பகுதியில் இரவு பகலாக மின்னொளியில் நடைபெறும் கூடைப்பந்தாட்ட போட்டியை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக அரங்குகள் அமைக்கப்பட்டது.

இந்த போட்டியினை அரங்குகளில் இருந்து கண்டுகளித்த பார்வையாளர்கள் விளையாட்டு வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.

செய்தியாளர் : சுதர்சன் - தேனி

First published:

Tags: Local News, Theni