முகப்பு /தேனி /

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா... முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்!

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா... முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்!

X
தேர்

தேர் திருவிழா 

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் .

தேர் திருவிழா :-

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ளது அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன.

காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்று சொல்லப்படுகிறது. எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலுக்கு ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கி பெரியகுளத்தில் முக்கிய பகுதிகளில் தேரோட்டம் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 26ஆம் தேதி பங்குனி உத்திரத் தேர் திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்று, 9 நாட்களாக பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தேருக்கு சமுதாய மண்டபப்படி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

தற்போது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர தேர்த்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் திருவிழா தேரோட்டத்தினை பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து மற்றும் ஊர் பெரியோர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெரியகுளத்தில் முக்கிய வீதிகளான சுதந்திர வீதி, வள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக தேரில் வள்ளி தெய்வானை மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. பெரியகுளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

top videos

    இந்நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

    First published:

    Tags: Local News, Theni