தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் பாரதி. இவருக்கு அவருடைய உறவினரான அருண் என்பவருடன் திருமணமாகி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த தம்பதிக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னமயில் மற்றும் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி மற்றும் தென்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் ஒன்றாக இணைந்து முதல் நிலைக் காவலர் பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில், பங்கேற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் பெண் ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் காவலர் பாரதிக்கு நெற்றியில் சந்தன குங்குமம் திலகமிட்டு வளையல் அணிவித்து மலர் தூவி குழந்தை நலமுடன் பிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவலர்கள் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவரையும் உணவு அருந்த செய்து காவலர்கள் அனைவரும் உணவு அருந்தினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், காவல் நிலையத்தில் உடன் பணியாற்றும் பெண் காவலருக்கு அனைத்து காவலர்களும் ஒன்று சேர்ந்து தாயுள்ளத்தொடும் சொந்த பந்தங்களாக கூடி நின்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni