ஹோம் /தேனி /

தேனியில் "சாமியே சரணம் ஐயப்பா" சரணம் பாடி மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள்

தேனியில் "சாமியே சரணம் ஐயப்பா" சரணம் பாடி மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள்

மாலை

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

Theni District News : கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று சுருளி அருவியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு ஒரு மண்டலம் கடுமையாக விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று சுருளி அருவியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு ஒரு மண்டலம் கடுமையாக விரதம் இருக்க தொடங்கியுள்ளனர்.

பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்தும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு தரிசனத்துக்காக பலர் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் இருக்கத் தொடங்குவர்.

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இந்த ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக நேற்று (16.11.22) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

இதனையடுத்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஒரு மண்டலம் கடுமையாக விரதம் இருக்கும் ஐயப்பன் பக்தர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று அருகே உள்ள ஐயப்பன் கோயில்களிலும் விநாயகர் சன்னதியிலும் மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க இன்று முதல் தொடங்குவது வழக்கமாக உள்ளது.

இதையும் படிங்க : ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலும் கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமான சுருளி அருவியில் நீராடிய பின்பு அங்குள்ள சன்னதிகளில் மாலை அணிந்து கொண்டு கடுமையாக விரதம் இருக்க தொடங்குவார்.

தேனி மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள சன்னதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டாலும் பெரும்பான்மையான ஐயப்ப பக்தர்கள் சுருளி அருவியில் தான் மாலை அணிந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து ஐயப்பனுக்கு பல ஆண்டுகளாக மாலை அணிந்து விரதம் இருக்கும் நபர்கள் குருசாமிகளாக , முதல் முறையாக மாலை அணிந்து ஐயப்ப பக்தர்களாக விரதம் கடைப்பிடிக்க உள்ள கன்னிச்சாமிகளுக்கு சரணம் ஐயப்பா சரணம் பாடி மாலை அணிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கார்த்திகை ஒன்றாம் தேதி இந்தாண்டு கரி நாளாக விளங்குவதால் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni