ஹோம் /தேனி /

மின்சிக்கன வார விழா - மின் சிக்கனம் குறித்து தேனியில் விழிப்புணர்வு

மின்சிக்கன வார விழா - மின் சிக்கனம் குறித்து தேனியில் விழிப்புணர்வு

X
விழிப்புணர்வு

விழிப்புணர்வு பேரணி 

தேனியில் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனியில் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக மின்சிக்கன வார விழா நிறைவு நாளில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு பேரணி

தேனியில் தேசிய மின் சிக்கன வார விழாவை ஒட்டி தேனி மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தமிழக முழுவதும் தேசிய மின்சிக்கன வார விழா டிசம்பர் 14 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தேனி கோட்டம் தேனி மின் பகிர்மான வட்டம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளில் தேனி பங்களாமேட்டில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு வாகனத்தை தேனி மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகனம் பங்களா மேட்டில் துவங்கி நேரு சிலை வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் அருகில் நிறைவடைந்தது.

பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் தேனி மின்சார துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Electricity, Electricity bill, Local News, Tamil News, Theni