ஹோம் /தேனி /

கம்பத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கோலப் போட்டி- ஏராளமான பெண்கள் பங்கேற்பு

கம்பத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கோலப் போட்டி- ஏராளமான பெண்கள் பங்கேற்பு

X
தேனி

தேனி கோலப் போட்டி

Theni | தேனியில் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேவையற்ற குப்பைகளை வீதியில் எரிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கம்பம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோலப்போட்டி

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகி நாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தவும்புகை இல்லாமல் போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசின் சார்பில் புகையில்லா போகி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேனி மாவட்டம் முழுவதிலும் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் போகி பண்டிகையன்றுதேவையற்ற பொருட்களை எரிக்காமல் நகராட்சி சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் போடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில் கம்பம் நகராட்சியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட, நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் முக்கிய பகுதிகளான புதிய பேருந்து நிலையம், கம்பம் மெட்டு ரோடு,போலீஸ் குடியிருப்பு, நாட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பொருட்களை எரிக்காமல் குப்பைத் தொட்டில் போடுவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கம்பம் நகராட்சி சார்பில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட கம்பம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோலப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. தேவையற்ற பாய், தலையணை போன்றவற்றைதங்கள் இல்லம் அருகில் வரும் குப்பை வாகனத்தில் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழா - கம்பத்தில் மதநல்லிணக்கம்

இந்தப்போட்டியில் மகளிர் குழுவினர் சார்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கண்களை கவரும் விதவிதமான கோலங்களையும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலங்களையும் போட்டு போட்டியில் பங்கேற்றனர். இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த கோலங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த கோல போட்டியை ஏராளமான பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் பார்வையிட்டனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni