Home /theni /

கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி - கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்

கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி - கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்

College students 

College students 

பேச்சுப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000,என்ற வகையில் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது .

    கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி - கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்


    தமிழக அரசின் சார்பில் ஜூன் 03ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.

    பேச்சுப்போட்டி :-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர், கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட்டது.

    இவ்வறிவிப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூன் 03ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகைகள் வழங்கப்பெறும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு தற்போது பொதுத் தேர்வுகள் நடப்பதால் அவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தும் நாள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தமிழ்வளர்ச்சி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனி மாவட்டத்தில் 03.06.2022 ஆம் நாளன்று (வெள்ளிக் கிழமை) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி காலை 10.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் தேனி மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.

    இப்பேச்சுப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என்ற வகையில் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி