தேனி மாவட்டம் கம்பத்தில் ‘நிரஞ்சனா தேவி நாட்டியாலயா’ பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பந்தனை நல்லூர் பாணியில் நாட்டியம் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார் இஸ்லாமிய பெண்ணான நிரஞ்சனா தேவி.
பரதநாட்டியம்:-
தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் மிகப் பழமையான கலைகளில் ஒன்றாக விளங்குகிறது பரதநாட்டியம். சிவபெருமாள் மற்றும் இந்து கடவுளுடன் தொடர்புடைய கலையாக பார்க்கப்படுகிறது பரதநாட்டியம்.
உலக மக்களை வியக்க வைக்கும் கலைகளில் ஒன்றாக திகழும் பரதநாட்டியம் இன்று ஜாதி, மத பேதம் இன்றி அனைத்து இடங்களிலும் பரந்து விரிந்துள்ளது. இதற்கு உதாரணமாக விளங்குகிறார் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ‘நிரஞ்சனா தேவி நாட்டியாலயா’- வில் பரதம் கற்றுத்தரும் இஸ்லாமிய பெண்ணான நிரஞ்சனா தேவி .
நிரஞ்சனா தேவி நாட்டியாலயா பள்ளி:-
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சனா தேவி. இவர் திருச்சி கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரியில் (BFA பரதம்) நாட்டியத்தில் பட்டம் பெற்றுள்ளார் . இந்து மதத்தை பின்பற்றி வந்த இவருக்கு சிறு வயது முதலே நாடடிய கலையின் மீது மிகுந்த பற்று இருந்துள்ளது . நாடடியத்தின் மீது கொண்டுள்ள தீராத காதல் காரணமாக தேனி மாவட்டத்தில் நாட்டிய கலையில் (BFA பரதம்) பட்டம் பெற்ற முதல் பெண்மணியாகவும் திகழ்ந்து வருகிறார்.
கம்பம் பகுதியில் இரண்டு மாணவர்களைக் கொண்டு ‘நிரஞ்சனா நாட்டியாலயா’ என்ற பள்ளியை உருவாக்கி, கம்பம் பகுதி மாணவிகளுக்கு நாட்டியக் கலையை பந்தனை நல்லூர் பாணியில் கற்றுக் கொடுக்க தொடங்கியுள்ளார்.
படிப்படியாக வளர்ச்சி அடைந்த இவரிடம் தற்போது 500க்கும் மேற்பட்ட மாணவிகள் நாட்டியம் கற்றுள்ளனர். 13 ஆண்டுகளாக இப்பள்ளியை நடத்தி வரும் இவர், இப்போது கம்பம் மட்டுமல்லாமல் கூடலூர் கே.கே. பட்டி தேனி உள்ளிட்ட நான்கு இடங்களில் ‘நிரஞ்சனா தேவி நாட்டியாலயா’ பள்ளியை உருவாக்கி அசத்தி வருகிறார்.
கலைக்கு மதம் தடையில்லை :-
தனது கணவர் இஸ்லாமியர் என்பதால், திருமணத்திற்கு பின்னர் இவரும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறியுள்ளார். அதுவும் திருமணம் ஆகி எட்டு வருடங்களுக்குப் பின்னர்தான் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுள்ளார். கொரோனா காலகட்டத்தில் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி இஸ்லாம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, இஸ்லாம் மார்கத்தை பின்பற்றி வருகிறார்.
இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றி வந்தாலும் பரதநாட்டியம் மீது கொண்ட பற்று காரணமாக, தொடர்ந்து ‘நிரஞ்சனா தேவி’ நாட்டியாலயா பள்ளியை நடத்தி வருகிறார். இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றி வந்தாலும் மக்கள் இப்பள்ளிக்கு அளிக்கும் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் கூறுகிறார் நிரஞ்சனா தேவி.
கலைக்கு ஜாதி, மத பேதம் கிடையாது என்பதற்கு அடையாளமாக திகழ்கிறார் நிரஞ்சனா தேவி. இவரிடம் நாட்டியம் பயில மாணவர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தொடர்ந்து இவரின் நாட்டிய பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், ‘மக்கள் மதத்தை பார்க்கவில்லை நல்ல கலைஞரை தான் பார்க்கிறார்கள்’ என பெருமிதத்துடன் கூறுகிறார் நிரஞ்சனா தேவி.
ஒரு மாணவருக்கு மாதம் 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கும் இவர் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறார்.
நிரஞ்சனா நாட்டியாலயாவின் நாட்டிய வகுப்புக்கள் KK பட்டியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5-7 மணி வரையும், கூடலூரில் ஞாயிறு காலை 10-12 மணி வரையும் , கம்பத்தில் ஞாயிறு மாலை 5-7மணி வரையும் ,தேனியில் திங்கள் மற்றும் செவ்வாய் மாலை 5-7 மணி வரையும் வகுப்புகள் நடக்கின்றன. மேலும் அரசின் சான்றிதழ் படிப்பான கிரேட் தேர்வு இப்பள்ளியில் கற்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
இப்பள்ளியில் பரதம் கற்றுக்கொண்ட மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பாராட்டையும் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்று முன்னேறி வருகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dance, Local News, Theni