முகப்பு /தேனி /

தேனிக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை.. அலறி ஓடிய மக்கள்!

தேனிக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை.. அலறி ஓடிய மக்கள்!

X
யானை

யானை

Cumbum Elephant | கம்பம் ஊர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

கம்பம் ஊர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை தமிழக கேரள மாநில வனத்துறையினர், காவல் துறையினர் வருவாய்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிசி கொம்பன் யானையை கடந்த கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி 4 கும்கி யானையின் உதவியுடன் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு குமுளி ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்து நின்றுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலினை அறிந்து விரைந்து வந்த தமிழக கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்போதைக்கு பொதுமக்களையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் செல்ல விடாமல் அங்கு பணியில் இருந்த பணியாளர்களை வெளியேற்றி யானையின் செயல்பாட்டினை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

திடீரென விளை நிலங்களுக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை இடம்பெறாமல் அங்கேயே இரவு முழுவதும் நின்று இருந்தது.

யானை கூடலூர் அருகே உள்ள கழுதை மேட்டில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர் . இன்று காலை நாலு மணி அளவில் யானை இடம் பெயர்ந்து கூடலூர் வழியாக கம்பம் பகுதியை வந்தடைந்தது.

பெரு மக்கள் தொகை கொண்ட கம்பம் பகுதியில் அரிசிகொம்பன் காட்டு யானை புகுந்ததை கண்டு கம்பம் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் கொண்டனர்.

பின் கம்பம் நகர் பகுதிக்குள் ஏகலூத்து சாலை வழியாக அரிசி கொம்பன் யானை நாட்டுக்கள் தெரு மின்சார வாரிய அலுவலக தெரு நெல்லு குத்தி புளியமரம் சாலை பகுதியில் புகுந்து சாலையில் நடந்து சென்றவர்களை விரட்டியதில் ஒருவர் பலத்த காயமும் இருவர் லேசான காயமும் அடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் பொதுமக்கள் சத்தமிட்டதை தொடர்ந்து கிளம்பிய யானை மின்சார வாரிய அலுவலகத் தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான புளியமர தோப்பில் நின்று கொண்டு தஞ்சம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதித்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  திடீரென நகருக்குள் புகுந்த அரிசிகொம்பன் யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Cumbum, Elephant, Local News, Theni