கேரளா மாநிலம் மூணாறு அருகே பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி யானையான அரிசி கொம்பன், கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டு கடந்த 30 ஆம் தேதி தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது.
கேரளாவில் 10 க்கு மேற்பட்டோரை கொன்ற இந்த யானை தமிழக வனப்பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு பகுதிக்குள் நுழைந்தது. அடுத்தடுத்து ஹைவே பகுதிகளில் அதன் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு கருதி மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அதனால் ஹைவேவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மலைக்கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் பொதுமக்களின் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களின் வாகனம் மற்றும் அரசுப் பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும் தேவையின்றி யாரும் வெளியே நடமாட வேண்டாம் இரவு நேரத்தில் முற்றிலும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழக வனத்துறையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியது மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மேகமலை பகுதியில் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து ரேடியோ காலர் கருவி மூலம் அரிசிகொம்பன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹைவே சாலை பகுதிக்கு நேற்று இரவு நேரத்தில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்து தாக்க முயன்றது அரிசிக்கொம்பன் யானை. சின்னமனூரில் இருந்து 8.30 மணி அளவில் மேகமலை வழியாக ஹைவே சாலை பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்து குபேந்திரன் காடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்தது அரிசி கொம்பன் யானை.
மேலும் படிக்க... இன்று ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியீடு.. இந்த லிங்கில் தான் செக் செய்ய வேண்டும்!
இதனால் அரசு பேருந்தை ஓட்டுநர் ஓரமாக நிறுத்தினார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அரிசி கொம்பன் யானை பேருந்தை நோக்கி வேகமாக திரும்பி வந்து தாக்க முற்பட்டது.பின்னர் ஏதும் செய்யாமல் அங்கிருந்து கடந்து சென்றது. யானை பேருந்தை தாக்க வரும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: பழனிக்குமார். தேனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.