முகப்பு /தேனி /

தேனி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விருப்பம் உள்ளதா? - வழிமுறைகள் இதோ! 

தேனி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விருப்பம் உள்ளதா? - வழிமுறைகள் இதோ! 

X
மாதிரி

மாதிரி படம்

Theni District News | தேனி மாவட்டத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்க ஆர்முள்ள நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து இ-சேவை மையம் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு. 

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்க ஆர்முள்ள நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து இ-சேவை மையம் அமைப்பதற்கான வழிமுறைகள் தெரிந்துகொள்வோம்.

இ-சேவை மையம் :

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அனைவருக்கும் இ-சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவரும் விண்ணப்பிக்க வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கணினி (Computer), அச்சுப்பொறி (Printer), வருடி சாதனம் (Scanner), கைரேகை அங்கீகார சாதனம்( Biometric device), இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் (Ramp) போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மேலும் மைய ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும்.

அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த 15.03.2023 முதல் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது www.tnesevai.tn.gov.in (அல்லது) www.tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.04.2023, 08.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும், வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் விண்ணப்பத்தை சரிபார்க்கப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்று கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000/- மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000/- விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதுவரை, 1,369 விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தை ஒரு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாக பயன்படுத்திக்கொள்ள படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்ற அனைவரையும், இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Theni