Home /theni /

தேனி மாணவர்களே.. இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க... திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தேனி மாணவர்களே.. இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க... திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தேனி மாணவர்களே..

தேனி மாணவர்களே..

Theni District News | தமிழ் இலக்கியத் திறனை மேம்படுத்த பிளஸ்-1 மாணவர்களுக்கு திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேனி தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ தெரிவித்துளளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாணவர்களே.. இந்த நல்ல வாய்ப்பை தவறவிடாதீங்க... திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் 

பிளஸ்-1 மாணவர்கள் தமிழ் இலக்கியத் திறனை மேம்படுத்துவதற்கான திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து   தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி வருவதைப் போன்று தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம், திறனறி தேர்வு நடைபெற உள்ளது.

2022-23-ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுதலாம். இந்த தேர்வை எழுத www.dge.tn.gov.in என்ற என்ற இணையதள முகவரியில் இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

10-ம் வகுப்பு தமிழ் பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இந்த தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 1ஆம் தேதி நடக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில் வெற்றி பெறும் 750 அரசு பள்ளி மாணவ, மாணவிகள், 750 இதர பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி