முகப்பு /தேனி /

Theni | தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

Theni | தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

X
சிலம்ப

சிலம்ப வீரர்கள்

Theni | தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தேனியில் பாராட்டு விழா நடைபெற்றது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த மாத இறுதியில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தேனி மாவட்டம் சார்பாக பங்கேற்று தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழா

தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் உள்ள மைதானத்தில் தேனி மாவட்ட விளையாட்டு கழகம் தேனி வைகை அரிமா சங்கம் மற்றும் தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்கம் சார்பில் சிலம்பம் போட்டியில் தேசிய அளவில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பெங்களூரு நகரில் கடந்த மாத இறுதியில் அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி ஜே எ அகாடமி சார்பில் நடத்தப்பட்டது. கர்நாடக மாநில அரசும் அகில இந்திய சிலம்ப அசோசியேசன் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் சிலம்பப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை வென்று வந்துள்ளனர்.

சிலம்ப வீரர்களுக்கு பரிசு

தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக சிலம்ப ஆசிரியர் மஸ்தான் தலைமையில் பங்கேற்ற மாணவர்கள் குழு சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற நிலையில், அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டும் விதமாக தேனி மாவட்டத்தில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் தேனி விளையாட்டு கழகம் மற்றும் கவரா நாயுடு கல்வி மேம்பாட்டு கழகம் சார்பில் தேசிய அளவில் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க தலைவர் சுப்புராம், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்ற சிலம்பம் வீரர் வீராங்கனைகளை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Theni