ஹோம் /தேனி /

சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது... தேனியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது... தேனியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

தேனி

தேனி

Theni District News | தேனி மாவட்டத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள்  வரும் 18ம் தேதிக்குள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 2023ம்  ஆண்டு ஜனவரி  24ம் தேதி மாநில அரசு  விருது வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் வரும் 18ம் தேதிக்குள் மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 2023ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி மாநில அரசு விருது வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்த பெண்குழந்தைகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேறு வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தாலும், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஓவியங்கள், கவிதைகள், மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல் போன்ற சாதனை புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் மாநில அரசின் விருது தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் ஆதார் பதிவு முகாம்... எந்த இடங்களில் நடக்கிறது தெரியுமா?

அதேபோன்று, வருகிற 24 ஜனவரி 2023-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் 15-ந்தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவிலான தேர்வு குழு மூலம் கூர்ந்தாய்ந்து மேற்காணும் விருதினை பெற உரிய நபர் தேர்ந்டுதெக்கப்பட்டு 24.01.2023 அன்று மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni