ஹோம் /தேனி /

தேனி அனுமந்தன்பட்டி அனுமந்தராயர் பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்திக்காக சிறப்பு அபிஷேகம்

தேனி அனுமந்தன்பட்டி அனுமந்தராயர் பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்திக்காக சிறப்பு அபிஷேகம்

X
அனுமந்தன்

அனுமந்தன் கோயில் 

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி அனுமந்தராயர் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகளும் பால்குடம் எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

அனுமன் ஜெயந்தி டிசம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கம்பம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி அனுமந்தராயர் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகளும் பால்குடம் எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ சுயம்பு சனிபந்தன ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அனுமன் ஜெயந்தி திருநாளை முன்னிட்டு அனுமந்தராயப்பெருமாள் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

அனுமந்தன்பட்டியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீசனிபந்தன ஆஞ்சநேயருக்கு 7வது ஆண்டு அனுமன் ஜெயந்தி திருநாளை முன்னிட்டு கணபதி பூஜை, கலசபூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. பூஜைகளை தொடர்ந்து அனுமந்தன்பட்டி பகுதியில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடுகளை நடத்தினார்கள்.

இதையும் படிங்க : அனுமன் ஜெயந்தி 2022: விரதம் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

தேனி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் தயிர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், தேன் அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் தோன்றிய அனுமந்தராயரை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Tamil News, Theni