ஹோம் /தேனி /

கூடலூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன்

கூடலூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன்

X
அங்கன்வாடி

அங்கன்வாடி கட்டிடம் திறப்பு 

Theni News | டலூர் 21வது வார்டு பகுதியான லோயர் கேம்ப் பகுதியில் 37 லட்சம் செலவில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

 ஆண்டிப்பட்டி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள மந்தையம்மன் கோயில் மற்றும் அருந்ததியர் தெரு பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் இயங்கி வந்த நிலையில்  கட்டிடங்களை அகற்றி புதிய அங்கன்வாடி மையம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கூடலூர் நகராட்சி நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகதுரை ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜனிடம் கூடலூர் பகுதியில் அங்கன்வாடி மையங்கள், லோயர் கேம்ப் பகுதியில் புதிய மேல்நிலைத் தொட்டி, பளியங்குடி குடியிருப்பு பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க பைப் லைன் அமைக்கவும் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து கூடலூர் மந்தையம்மன் கோயில் மற்றும் அருந்ததியர் தெரு பகுதியில் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட தலா 10 லட்சம் வீதம் 20 லட்ச ரூபாய் செலவில் இரண்டு புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத் திறப்பு விழா கூடலூர் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆணையாளர் காஞ்சனா குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி முன்னிலையில் நடைபெற்றது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையங்களையும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார்.

இதனையடுத்து கூடலூர் 21வது வார்டு பகுதியான லோயர் கேம்ப் பகுதியில் 37 லட்சம் செலவில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியும், பளியங்குடி குடியிருப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் சீராக வழங்க 80 லட்சம் மதிப்பீட்டில் 4.6 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணிர் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

First published:

Tags: Local News, Theni