பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் மூலிகை வேர்களை வைத்து சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு அபிஷேகம் :-
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயிலில் மூலிகை வேர்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்தப் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் மகாலட்சுமி சிவகாமி தாயாருக்கும் அதிகார நந்தீஸ்வருக்கும் மற்றும் நாகராஜனுக்கும், சிவனுக்கும் அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ ஆகிய பூக்களை கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இந்த சிறப்பு நாளில் பெயர் சொல்லாத மூலிகைகளை வைத்து அதன் மேல் விளக்கு ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் குலதெய்வம் வராதவர்களுக்கு குலதெய்வம் வீடுதேடி வரும் தொழில் மற்றும் செல்வம் பெருகும் பெண்கள் வளர்ச்சி அடைவார்கள் என்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்தகோயிலில் லெமன் சாதம் தயிர் சாதம் சர்க்கரை பொங்கல் புளி சாதம் வெண்பொங்கல் ஆகியவற்றை வைத்து மகாலட்சுமி சிவகாமி தாயாருக்கும் நந்தீஸ்வரர் நாகராஜன் சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன பூஜைக்கான ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார். இந்த சிறப்பு பிரதோஷ நாள் வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசித்து சென்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.