தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர், அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளார்.
நல்ல தொழில் உறவை பேணிக்காக்கும் தொழிலாளர் துறையினர் மற்றும் தொழிற்சங்கங்கள் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
நல்ல தொழில் உறவை பேணிக்காக்கும் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் http://www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
Must Read : மேகங்கள் விளையாடும் வால்பாறை... 3 நாள் டூர் பிளான் - குடும்பத்தோடு என்ஜாய் பண்ணலாம்!
பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரங்களை இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni