Home /theni /

தனியார், அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 25க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

தனியார், அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 25க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரசு, தனியார் ஐ.டி.ஐயில் சேர விரும்புபவர்கள் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    இக்கலந்தாய்வில் புதிதாக விண்ணப்பிப்பவா்கள், முதல் கட்ட கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெறாதவா்கள், முதல் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்யாதவா்கள் பங்கேற்கலாம்.

    2-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோா் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தேனி, ஆண்டிபட்டி, தப்புக்குண்டு சாலையில் உள்ள போடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு ஏற்பாடுகள்
    செய்யப்பட்டுள்ளன.

    தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கை குறித்த விவரத்தை தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம்- கைப்பேசி எண்: 94990-55765,  ஆண்டிபட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம்-
    கைப்பேசி எண்: 94990 55770, 94990 55768 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி