ஹோம் /தேனி /

தேனியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

தேனியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

தேனி

தேனி

Theni District | தேனி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி வரும் 12ம் தேதி பள்ளி மாணவர்களுக்காக பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதில் முதல் பரிசாக ரூ.5000மும், 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ,2000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி வரும் 12ம் தேதி பள்ளி மாணவர்களுக்காக பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதில் முதல் பரிசாக ரூ.5000மும், 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ,2000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், வரும் 12ம் தேதி பள்ளி மாணவர்களுக்காக பேச்சு போட்டி, தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் (ஆண்கள்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 10 மணி முதல் சமூக இடை வெளியுடன் நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் மாவட்ட த்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை மின் தடை தெரியுமா?

தலைப்புகள்:

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு “அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்” எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களு க்கான பேச்சுப்போட்டிக்கு “வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை” எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

மேலும், பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க : முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் இருப்பு குறைகிறது - தேனி விவசாயிகள் கவலை

இதேபோல் பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கு போட்டி:

கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000, என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளி தரன் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Teni