Home /theni /

தேனி மக்களிடையே அதிகரிக்கும் ரத்த சோகை.. பிரசவகால மரணங்களுக்கு முக்கிய காரணம் இது தான்..

தேனி மக்களிடையே அதிகரிக்கும் ரத்த சோகை.. பிரசவகால மரணங்களுக்கு முக்கிய காரணம் இது தான்..

தேனி

தேனி - கம்பத்தில் மாணவிகளுக்கு ரத்தசோகை பரிசோதனை..

Theni District Latest News : தேனி மாவட்டம் கம்பம் அரசு பெண்கள் நடுநிலை பள்ளியில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்ஸ்வஸ்தியா (Ayurswasthiya) திட்டத்தின் கீழ்  ரத்த சோகைக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது .

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
ரத்த சோகையை ஒழிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில்  தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை பற்றிய பரிசோதனை செய்து அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைபெற உள்ளது. 

ரத்த சோகை விழிப்புணர்வு :-

தேனி மாவட்டம் கம்பம் அரசு பெண்கள் நடுநிலை பள்ளியில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்ஸ்வஸ்தியா (Ayurswasthiya) திட்டத்தின் கீழ்  ரத்த சோகைக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது .

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் இணைந்து நடத்திய இந்த முகாமில் 100க்கும் அதிகமான மாணவிகளுக்கு ரத்த சோகை தொடர்பான பரிசோதனையும் நடத்தப்பட்டு, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் எடை, உயரம், ரத்தத்தின் அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களை தொடர்ந்து கண்காணித்து இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட உள்ளது.

ரத்த சோகைக்கான உணவு


ஆரோக்கியமான வருங்கால சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் முழு உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், தமிழகத்தில் 55 சதவீத மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை இருப்பது ஆய்வில் தெரிந்திருப்பதால் , பள்ளி மாணவ மாணவிகளிடையே ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான சிகிச்சை வழங்க முடிவெடுக்கப்பட்டது எனவும், பெண்கள் கர்ப்பமுற்றால், தொடக்க காலத்தில் ரத்த சோகை காரணமாக மிகவும் சிரமம் அடைவதாகவும் , பிரசவ கால மரணங்கள் 10 நடை பெற்றால் அதில் 8 மரணங்கள் , ரத்த சோகை காரணமாகவே நிகழ்கிறது எனவும் தெரிவித்துள்ளனர் .


ரத்த சோகைக்கான அறிகுறிகள்


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழகத்தில் தேனி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ரத்தசோகை உள்ள நபர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்பட்டதால் தேனி மாவட்டத்தில் கம்பம் வட்டாரத்தில் இருந்து இந்த முகாம் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலவச ஆலோசனை :-

இந்த நிகழ்ச்சி குறித்து தேசிய சித்த மருத்துவ இயக்குனர் மீனா குமாரி கூறுகையில், "பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஆயுர்ஸ்வஸ்தியா திட்டத்தின் கீழ் 10 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ மாணவியர்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் பெற்றோர்கள் என அனைவருக்கும் ரத்த சோகை தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளும் இலவச மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

ரத்த சோகைக்கான அறிகுறிகள்


மத்திய அரசு சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 10% வரை ஆயுஷ் அமைச்சகத்துக்கு ஒதுக்கி நம் மண் சார்ந்த மருத்துவமாகிய ஆயுர்வேதா,சித்த மருத்துவம்,யுனானி ஹோமியோபதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கொரோனா நோய் தொற்று காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 சதவீத நோயாளிகளை குணப்படுத்தவும், இறப்பிலிருந்து அவர்களை மீட்கவும் சித்த மருத்துவம் உதவியதாக கூறினார்.


ரத்த சோகை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு


மேலும் இந்த நிகழ்ச்சியில் ரத்த சோகை தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ரத்த சோகையை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள் உள்ளிட்டவை குறித்த கையேடுகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேசிய சித்த மருத்துவ நிறுவன இணை பேராசிரியர் இளஞ்சேகரன், கம்பம் வட்டார மருத்துவ அலுவலர் முருகன், மற்றும் சித்த மருத்துவர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரத்த சோகை குறித்து மேலும் விழிப்புணர்வு தேவைப்படுவோர் திட்ட அலுவலர் மீனா குமாரியை 91765 34465 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்..
Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni

அடுத்த செய்தி