ஹோம் /தேனி /

ஆண்டிப்பட்டி : தனியார் கல்லூரியில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்

ஆண்டிப்பட்டி : தனியார் கல்லூரியில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்

X
பொங்கல்

பொங்கல் கொண்டாட்டம்

Theni pongal celebration | ஆண்டிப்பட்டி அருகே உள்ள கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • andi, India

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கல்லூரி மாணவ மாணவிகள் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர்.

சமத்துவ பொங்கல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் உள்ள தனியார்‌ பொறியியல் கல்லூரி பாலிடெகனிக் கல்லூரியில் 1000-ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய முறைபடி கல்லூரி மாணவ, மாணவிகள் வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றனர். கல்லூரி மாணவிகள் தலைகளில் பொங்கல் வைத்த பானைகளை சுமந்து வர அவர்களை பேண்டு வாத்தியத்துடன் ஒலி எழுப்பி ஆட்டம் ஆடி வந்தனர் கல்லூரி மாணவர்கள்.

கோலம்போடும் மாணவிகள் 

அதனையடுத்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான உறிஅடி போட்டி கோலப்போட்டி, பாரம்பரிய நடன போட்டிகள் நடைபெற்றது. உறியடி போட்டியில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றது பார்வையாளர்களை குதூகலபடுத்தியது.

பொங்கல் கொண்டாட்டம்

இதையடுத்து கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கலை வரவேற்கும் விதமாக பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குரலெழுப்பி சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni