உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் நேற்று (மே 31) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது .
புகையிலை பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள், புகையிலை தடுக்கும் வழிமுறைகளை பற்றி எடுத்துக்கூறி உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்பு இந்த அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த கர்ப்பிணி தாய்மார்கள், புறநோயாளிகள், பொதுமக்கள் என அனைவரிடமும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்கள் குறித்தும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் போன்ற தீமைகள் பற்றியும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வானது வட்டார மருத்துவ இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் உமா ராஜகோபாலன் முன்னிலையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி விழிப்புணர்வு முகாமில் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் புறநோயாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டு புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் தெரிந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி அரசு மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக இம்மருத்துவமனையின் செவிலியர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.