முகப்பு /தேனி /

ஆண்டிபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.. முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

ஆண்டிபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.. முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

X
ஆண்டிபட்டியில்

ஆண்டிபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Double Bullock Cart Competition : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தேனி வடக்கு திமுக சார்பாக இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தேனி வடக்கு திமுக சார்பாக முதல்வரின் பிறந்தநாளையொட்டி இரட்டை மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. வைகை அணையில் துவங்கிய மாட்டுவண்டி பந்தயம், தேவதானப்பட்டி சாலை பிரிவு வரை நடைபெற்றது.

போட்டிகளை தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கச் தமிழ்ச்செல்வன், திமுக கொடி அசைத்து துவக்கி வைத்தார். பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாட்டு வண்டி பந்தயம், பெரியமாடு, கரிச்சான், பூஞ்சிட்டு, தேன்சிட்டு ஆகிய 4 பிரிவுகளில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசு 40,000 ரூபாய், 3ம் பரிசு 30 ஆயிரம் ரூபாய், 4ம் பரிசு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற மாட்டு வண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பொதுமக்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.

First published:

Tags: Local News, Theni