முகப்பு /தேனி /

ஆண்டிப்பட்டி : 300 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!

ஆண்டிப்பட்டி : 300 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!

X
கோயில்

கோயில் கும்பாபிஷேகம்

Theni andipatti temple kumbabishegam | ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள இக்கோயிலில் 18 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது நடைபெற்ற மகாகும்பாபிஷேகம் விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andipatti Jakkampatti | Theni Allinagaram

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலில் 18 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது .

கும்பாபிஷேகம் :-

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது . இக்கோயிலில் 18 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

இந்து சமய ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஐதீகம் . அதன் அடிப்படையில் 18 ஆண்டுகள் ஆன காரணத்தால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோவில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் விமான கலசத்திற்கு மகாபிசேகமும் நான்கு கால யாகசாலை பூஜைகளும் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாகதி நிகழ்ச்சியும் நடைபெற்றது .

அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பொதுமக்கள் மேல் தீர்த்தமாக தெளிக்கப்பட்டது

அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர் .

மேலும் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால் பழம் தயிர் சந்தனம் குங்குமம் பன்னீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது . பரம்பரை அறங்காவலர் காந்திமதி நாதன் மற்றும் பூசாரி கணேசன் உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .காவல்துறையினர் டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

First published:

Tags: Festival, Local News, Theni