ஹோம் /தேனி /

தேனி அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி

தேனி அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி

வீடு இடிந்து விழுந்து பலியான மூதாட்டி

வீடு இடிந்து விழுந்து பலியான மூதாட்டி

Theni District | தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மாலைப்பட்டியில் மழைக்கு மண் சுவர் வீடு இடிந்து விழுந்ததில் சுமார் 75 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. க.விலக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி நகரை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது . தேனி அருகே தொடர் மழை காரணமாக மண் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

தேனி அருகே மாலைபட்டியை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மாயக்காள்(75). இவர் மண் சுவராலான தகர வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (நவ. 2) இரவு அப்பகுதியில் பெய்த கனமழைக்கு மூதாட்டி தங்கி இருந்த வீட்டின் மண் சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது.

மண் சுவர் இடிந்து விழுந்ததில் மாயக்காள் உடலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தினர்.

இதையும் படிங்க : பசுமை சோலையாக மாறப்போகும் கம்பம் நகர்... கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்...

மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நேற்று இரவே சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி மாயக்காள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் இது தொடர்பாக க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni