தமிழ்நாட்டில் உள்ள 108 அம்மன் கோயில்களில் ஒன்றான வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி திருவிழா :-
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மிக சிறப்பாக நடைபெறும். வீரபாண்டி சித்திரை திருவிழா ஏழு நாட்கள் நடைபெறுவது வழக்கம். தேனி மாவட்டத்திலேயே மிகவும் பெரிய அளவில் நடைபெறும் இக்கோயில் திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்வர்.
இந்தக் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா, அக்னி வெயில் ஏற்படுகின்ற நாட்களில் நடைபெறும். பக்தா்கள் வெப்ப கதிர்வீச்சால் ஏற்படுகின்ற நோய்களான பெரியம்மை, சின்னம்மை மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க அக்கினிசட்டி எடுத்தும், சேற்றாண்டி வேசமிட்டும், மஞ்சள் நீராடியும், ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபட்டு, சித்திரைத் திருவிழா நடத்துவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கடந்தாண்டு (2022) வீரபாண்டி கெளவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 10ல் துவங்கி 17 ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் 19ல் கொடிமரம் எடுத்தல், ஏப்ரல் 20ல் கம்பம் நடுதல், மே 13ல் தேர் திருவிழா நடைபெற்றது.
அதேபோல இந்த ஆண்டு வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா பற்றிய அறிவிப்பை கோயில் நிர்வாக செயல் அலுவலர் மாரிமுத்து வெளியிட்டுள்ளார். இந்தாண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கொடியேற்றம் தொடங்க உள்ளது. கோயிலின் சித்திரை திருவிழா மே 9தேதி தொடங்கி மே 16ஆம் தேதி வரை பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறும் அறிவிப்பு வெளியாகியவுடன் தேனி மாவட்டம் மக்களும் ஆன்மீக பக்தர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni