முகப்பு /தேனி /

தேனி புத்தகக் கண்காட்சி... பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு காணொளி

தேனி புத்தகக் கண்காட்சி... பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு காணொளி

X
விழிப்புணர்வு

விழிப்புணர்வு காணொளி 

Theni District | தேனி மாவட்டத்தில் நடைபெறும் முதல் புத்தகக் கண்காட்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல் புத்தகக் கண்காட்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தேனி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் மில் மைதானத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள முதல் புத்தகத் திருவிழாவை ஒட்டி, பொதுமக்களை கவரும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அரசு சார்பில், மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் முதன் முதலாக மார்ச் 3ஆம் தேதி புத்தக திருவிழா தொடங்கியது.

பழனிசெட்டிபட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில்ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் முதல் முதலாக நடைபெறும் புத்தகத் திருவிழாவை பற்றி அனைவரும் அறிய, மாவட்டம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஒலிபெருக்கி மற்றும் இதர ஊடகம் வாயிலாகவும் விளம்பரம் ஏற்படுத்தி புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது .

அந்த வகையில் தற்போது புத்தகக் கண்காட்சி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தேனி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாவட்டத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி பற்றியும், கண்காட்சியில் இடம் பெற்றுள்ள வசதிகள் குறித்தும், புத்தக கண்காட்சி நடைபெறும் இடம், நாள்,நேரம் மற்றும் புத்தக கண்காட்சி பற்றி சிறப்புகளையும் உள்ளடக்கியதாக இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உத்தமபாளையம் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் அருணா ஆலோசனையிலும் , வட்டார வளமையம் ஆசிரியர் பயிற்றுநர் வளர்மதி இயக்கத்திலும் உருவான இந்த காணொலி, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியில் பாட்டி மற்றும் பேத்தி கதாபாத்திரம் வாயிலாக புத்தக கண்காட்சி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காணொளியில் ஆனைமலையன்பட்டி ஊராட்சி ஒன்றிய‌ நடுநிலைப்பள்ளிஆசிரியர் திலகவதி பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், குழந்தை கதாபாத்திரத்தில் சிறுமி சாதனா நடித்துள்ளார். புத்தக கண்காட்சி பற்றி விழிப்புணர்வு பதிவாக வெளிவந்துள்ள இந்த காணொளியை மாவட்ட மக்களும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Theni