ஹோம் /தேனி /

தேனியில் பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு... உணவு பாதுகாப்பு துறை ஏற்பாடு...

தேனியில் பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு... உணவு பாதுகாப்பு துறை ஏற்பாடு...

பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு

Theni | கம்பம் அரசு ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக சமையல் எரிவாயு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

கம்பம் அரசு ஆங்கூர் ராவுத்தர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக சமையல் எரிவாயு எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றியும், அயோடின் உப்பு பள்ளி மாண மாணவிகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அயோடின் உப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அரசு ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக சமையல் எரிவாயு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் ராகவன் தலைமையில் பள்ளியின் ஆசிரியை மற்றும் மாணவிகள் சமையல் எரிவாயுவை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்தும் , உணவில் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க : தேனியில் தன்னை கடித்த கட்டுவிரியனுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்... டாக்டர்கள் நடுக்கத்துடன் சிகிச்சை...

சமையல் எரிவாயுவே பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டதுடன் , அயோடின் உப்பு எதற்காக பயன்படுத்த வேண்டும் அதில் உள்ள நன்மைகள் என்ன என்பது பற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாணவ மாணவிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

ஒரு குழந்தைக்கு நாள்தோறும் தேவைப்படும் அயோடினை உணவில் உப்பின் மூலமே சேர்த்துக் கொள்ள முடியும். அயோடின் உப்பு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, நுன்னறிவித்திறன், ஞாபக சக்தி, கல்வித்திறன், புத்திக்கூர்மை, தைராய்டு சுரபி சீராக செயல்படுவது வளர்சிதை மாற்றும் சீராக நடைபெற்றது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நடைபெறுவதாகவும், ஒரு குழந்தைக்கு உப்பில் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் கருச்சிதைவு, குழந்தை பிறந்தவுடன் இறத்தல், நரம்பியல் சார்ந்த உடல் குறைபாடுகள் மனவளர்ச்சி குறைதல், காதுகள் கேளாமை , வாய் பேச முடியாமை குள்ளத்தன்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன் ,மதன்குமார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி கம்பம் இந்தியன் எரிவாயு விநியோகஸ்தர்கள் செல்வராணி காட்சி கண்ணன் உள்பட பள்ளியின் மாணவிகள் ஆசிரியைகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni