ஹோம் /தேனி /

தேனியில் ரிசர்வ் வங்கியின் சார்பில் பண பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

தேனியில் ரிசர்வ் வங்கியின் சார்பில் பண பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

X
விழிப்புணர்வு

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

Theni District News : தேனி மாவட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சார்பில் பண பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி பழைய பேருந்து நிலையத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் ஆட்டோ பேருந்தில் பயணித்த பொதுமக்களிடமும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இணையதளம் மூலமாக ஏடிஎம் வங்கி கொள்ளையர்கள் எவ்வாறு பொதுமக்களை ஏமாற்றுவார்கள் என்பது குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும், நகைச்சுவை யான பேச்சுகளாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்.....

மேலும் சோதித்தரியப்பட்ட நம்பகமான உதவிகளை மட்டுமே உபயோகிப்பது, பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு ஹச்.டி.டி.பி.எஸ்

( HTTPS) பாதுகாப்புடன் கூடிய இணையதளங்களை பயன்படுத்துவது, பணம் செலுத்தும் செயல்களை அவ்வப்போது புதுவித்துக்கொள்வது உள்ளிட்டவைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தெரிந்த பயனாளிகளுக்கு மட்டுமே பணம் பரிமாற்றம் செய்வது யூபி மூலம் பணம் செலுத்தும்போது பெறுபவர்கள் கோரிக்கை தகவல்களை சரி பார்ப்பது உள்ளிட்டவைகளை பொதுமக்கள் பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி கனரா முன்னோடி வங்கி, தேனி சைபர் கிரைம் போலீசார் மற்றும் தேனி - கரூர் வைசியா வங்கியினர் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Theni