தேனி மாவட்டம் பல்வேறு இயற்கை வளங்கள் நிரம்பிய செழிப்பான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் செழிப்பான நீர்வளம் இயற்கைவளம், கனிமவளம் போன்ற பல்வேறு சிறப்புகள் இருந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் புகழ் தமிழகம் எங்கும் ஒலிக்கும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் உற்பத்தியாகும் நீர்வரத்து மூலமும் , மழைப்பொழிவினால் உண்டாகும் நீர்வரத்தை அணைகளில் தேக்கி வைத்து, அந்த நீர் மூலமும் விவசாயி பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ள தேனி மாவட்டத்தில் பெய்யும் மழைப்பொழிவும், மலைப்பொழிவு பற்றி பதிவாகிய விவரங்கள் குறித்த தகவலும் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது . மழைப்பொழிவின் விவரங்களை வைத்து விவசாயிகள் தங்களின் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தேனி மாவட்டம் அச்சரேகை, தீர்க்கரேகை கணக்கின்படி சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறும் மாவட்டத்தில் முதன்மை மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனரகம் கண்டறிந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்யும் மழைப்பொழிவை கணக்கிட அரண்மணைபுதூரில் மத்திய நீரியல் ஆணையம் சார்பில் மத்திய மழை மானி கணக்கிடும் மையம் உள்ளது. அதே போல பொதுப்பணித்துறை சார்பில் வீரபாண்டி, சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணை, கூடலூர், தேக்கடி, பெரியாறு அணை, சண்முக நதி அணை உள்ளிட்ட எட்டு இடங்களிலும் , வருவாய் துறை சார்பில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி ஆகிய நான்கு தாலுகா அலுவலகங்கள் என மொத்தம் 13 இடங்களில் மழை மானி மூலம் மழையளவு சேகரிக்கப்பட்டு வருகிறது .
கூடுதல் மழைமானி மையம் :-
மழைமானி பொருத்தப்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் விவரங்களை வைத்து தேனி மாவட்டத்தில் பொழியும் மழையின் அளவு பதிவாகிறது. அடிக்கடி சீதோஷ்ண நிலை மாறும் மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளதால் , மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக கணக்கிட வேண்டும் என்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனரகம் கூடுதல் மழைமானி நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளது .
தேனி அல்லிநகரம், கோவிந்த நகரம், ராஜதானி , கண்டமனூர், கடமலைக்குண்டு, திம்மரச நாயக்கனூர், பாலக்கோம்பை , பண்ணைப்புரம், தேவாரம், கம்பம், லோயர் கேம்ப், சுருளிப்பட்டி, ஹைவேவிஸ், சின்ன ஓவுலாபுரம் , மார்க்கையன்கோட்டை, உப்பு கோட்டை , போடி மீனாட்சிபுரம், குரங்கணி , முருகமலை நகர்,
ஆகிய 19 இடங்களில் புதிதாக தானியங்கி மழை மாணி மையம் அமைய உள்ளது.
மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தானியங்கி வானிலை மையம் அமைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதனால் துல்லியமான மழையளவு காற்றின் வேகம், புயல், வெப்பம் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni, Weather News in Tamil