ஹோம் /தேனி /

சொன்னதை செய்த அஜித் ரசிகர்..!! இப்ப பைக்.. அடுத்தது கார்.. வேற லெவல் அஜித் ரசிகர் நம்ம தேனி ‘வீரம்’ காளிதாஸ்..!

சொன்னதை செய்த அஜித் ரசிகர்..!! இப்ப பைக்.. அடுத்தது கார்.. வேற லெவல் அஜித் ரசிகர் நம்ம தேனி ‘வீரம்’ காளிதாஸ்..!

அஜித்

அஜித் ரசிகர் தேனி வீரம் காளிதாஸ்

Theni Ajith Fans | துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து தீவிர அஜித் ரசிகர் தனது கடையில் குலுக்கல் போட்டி நடத்தி அதில் முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை பரிசளித்த நிலையில் , திரைப்படம் வெளியாகும் பொழுது முதல் பரிசாக கார் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni, India

துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து தீவிர அஜித் ரசிகர் குலுக்கல் போட்டி நடத்தி அதில் முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை பரிசளித்த நிலையில் , திரைப்படம் வெளியாகும் போது முதல் பரிசாக கார் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படமான துணிவு திரைப்படம் வெற்றி பெற தனது உணவகத்தில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் பரிசு போட்டி நடத்தப்பட்டு ஒரு லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், எல்இ.டி டிவி, மிதிவண்டி, வாஷிங் மெஷின், வெட் கிரைண்டர், மிக்ஸி, குக்கர், சோபா செட், உள்ளிட்ட 61 பொருட்கள் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வீரம் உணவகம் நடத்தி வருபவர் காளிதாஸ். இந்த உணவகம் சின்னமனூரில் இருந்து மேகமலைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

திக்குமுக்காட வைக்கும் ‘வீரம்’ காளிதாஸ்..!

மேலும் படிக்க:  தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்

தீவிர அஜித் ரசிகரான இவர் தனது உணவகத்தில் அஜித்தின் துணிவு படம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என குலுக்கல் பரிசு போட்டியை நடத்தி பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அஜித்தின் நடிப்பில் 61 வது திரைப்படமாக துணிவு படம் வெளியாக உள்ளதால், தனது கடையில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு பரிசு கூப்பன் வழங்குகிறார் . அந்த கூப்பனில் மக்கள் தங்களின் பெயர் முகவரி செல்போன் நம்பர் உள்ளிட்டவைகளை எழுதி குலுக்கல் பரிசு பெட்டியில் போட வேண்டும் .

துணிவு படத்துக்காக 61 பரிசுகள்

மேலும் படிக்க:  மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் : தேனி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

இருசக்கர வாகனம் பரிசு :-

இதன்படி குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசாக இருசக்கர வாகனம் , இரண்டாம் பரிசாக எல்இடி டிவி , மூன்றாம் பரிசாக வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் குலுக்கலில் தேர்வான அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப்பட்டது . அதனை தொடர்ந்து சோபா செட், சைக்கிள், மிக்ஸி, வெட் கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட 61 வகையான பொருட்கள் பரிசுப் பொருள்களாக வழங்கப்பட்டது.

வீரம் ரெஸ்டாரண்ட், மேகமலை சாலை

இந்த குலுக்கல் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் வீரம் உணவகத்தில் 61 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி கூப்பன்களை எழுதி போட்டு குலுக்கல் போட்டியில் பங்கேற்ற நிலையில் , முதல் பரிசான இருசக்கர வாகனத்தை தேனியை சேர்ந்த ருத்ரதேவ் என்ற நபர் வென்றார்.

மேலும் படிக்க:  காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

அதனை தொடர்ந்து குலுக்கல் போட்டியை காண கடைக்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவச ஸ்வீட் பாக்ஸும் வழங்கப்பட்டது.

ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி

அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி பழைய பத்து ரூபாய் நோட்டு போன்று இருப்பதால் பழைய பத்து ரூபாய் கொடுத்து சிக்கன் பிரியாணி பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆஃபர் இங்கே உள்ளது .

அஜித் நடித்த 61வது திரைப்படத்தின் பெயர்களையும் எழுதியும் அவரின் புகைப்படத்தை ஒட்டி ஆல்பம் ஆக தயாரித்து வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி 60 ரூபாய்க்கும் வழங்கி வருகிறார் . இதனால் அந்த கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது.

குலுக்கல் போட்டியின் போது

மேலும் படிக்க:  10 தலைகளுடன் ராவணன்... வியக்கவைக்கும் புதுக்கோட்டை குடுமியான்மலை சிற்பங்களின் புகைப்பட தொகுப்பு!

கார்பரிசு :-

இது குறித்து கடையின் உரிமையாளரான காளிதாஸ் கூறுகையில் , " நடிகர் அஜித்தின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக இவ்வாறு பரிசு போட்டியை நடத்தி வருவதாகவும் , இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை பொதுமக்களுக்கு வழங்கியதாகவும் , விரைவில் நடிகர் அஜித் பெயரில் ஆசிரமம் கட்ட வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது துணிவு படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதற்காக இந்த குலுக்கல் போட்டியை நடத்தியுள்ளேன். துணிவு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் திரைப்படம் வெளியாகும்போது இதே போல குலுக்கல் போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக கார் மற்றும் பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை வழங்க உள்ளேன் . தொடர்ந்து மக்களின் ஆதரவு எனக்குள்ளதால் துணிவுடன் இதனை செய்கிறேன் ' என்றார்.

Published by:Arun
First published:

Tags: Actor Ajith, Ajith fans, Local News, Theni