ஹோம் /தேனி /

அஜித்துக்கு இப்படியும் ஒரு ரசிகரா.?! துணிவு படத்துக்காக குலுக்கல் போட்டி.. பைக், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட 61 பரிசுகள் வெல்ல நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!

அஜித்துக்கு இப்படியும் ஒரு ரசிகரா.?! துணிவு படத்துக்காக குலுக்கல் போட்டி.. பைக், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட 61 பரிசுகள் வெல்ல நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!

அஜித்

அஜித் ரசிகரின் துணிவு பம்பர் குலுக்கல்

Ajith Thunivu Movie Updates | நடிகர் அஜித்தின் 61ஆவது திரைப்படமான துணிவு திரைப்படம் வெற்றி பெற தனது உணவகத்தில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் பரிசு போட்டி நடத்தி பைக், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளை வழங்க இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில்  'வீரம் உணவகம்' என அஜித்தின் பட பெயரிலேயே உணவகத்தை நடத்தி வருகிறார் காளிதாஸ். இந்த உணவகம் சின்னமனூரில் இருந்து மேகமலைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

தீவிர அஜித் ரசிகரான இவர் தனது உணவகத்தில் துணிவு படம் வெற்றி பெறுவதற்காக குலுக்கல் போட்டி ஒன்றை நடத்தி வருகிறார் .

அஜித் நடித்து வெளியான வலிமை திரைப்படம் வெளியானபோது தனது கடையை திறந்த அஜித்தின் தீவிர ரசிகரான காளிதாஸ் வலிமை படம் வெற்றி பெறுவதற்காக ஒரு டீ 1 ரூபாய்க்கும், பரோட்டா 6 ரூபாய்க்கும் விற்பனை செய்து உள்ளார் . அஜித்தின் 60வது படம் வெளியானதால் சிக்கன் பிரியாணி உட்பட உணவகத்தில் உள்ள அனைத்து உணவுகளும் 60 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். 60 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக உணவு அளித்தும் பரோட்டா 6 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளார்.

‘துணிவு’ அஜித்

மேலும், அஜித்தின் கட் அவுட்டிற்கு 60 லிட்டர் பாலபிஷேகம் செய்தும், வலிமை படம் வெளியானதை கொண்டாடும் வகையில், பானை உடைக்கும் போட்டி, மியூசிக்கல் சேர் போட்டி, சிலம்பம் சுற்றும் போட்டி என பல போட்டிகள் நடத்தி திருவிழாவாக கொண்டாடி உள்ளார்.

மேலும் படிக்க:  திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

சமீபத்தில் உணவகத்தை திறந்த அஜித்தின் தீவிர ரசிகர் காளிதாஸ், அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் கடை முழுவதும் அஜித்தின் புகைப்படத்தால் அலங்கரித்து உள்ளார்.

அஜித்தின் துணிவு திரைப்படம் :-

தற்போது நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் வெற்றி பெறுவதற்காகவும் துணிவு திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை கொண்டாடும் விதமாகவும் தனது கடையில் குலுக்கல் பரிசு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

ஆஃபர்களை அள்ளித்தெளித்த அஜித் ரசிகர்..

அஜித்தின் நடிப்பில் 61 வது திரைப்படமாக துணிவு படம் வெளியாக உள்ளதால், தனது கடையில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு பரிசு கூப்பன் வழங்குகிறார் . அந்த கூப்பனில் மக்கள் தங்களின் பெயர் முகவரி செல்போன் நம்பர் உள்ளிட்டவைகளை எழுதி குழுக்கள் பரிசு பெட்டியில் போட வேண்டும் .

பைக், ஃபிரிட்ஜ் பரிசு :-

தீபாவளிக்கு மறுநாள் குலுக்கள் நடைபெறும். குழுக்களில் 61 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக இருசக்கர வாகனம் , இரண்டாம் பரிசாக எல் இ டி டிவி , மூன்றாம் பரிசாக வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சோபா செட், சைக்கிள், மிக்ஸி, வெட் கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட 61 வகையான பொருட்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க:  ராவணனின் மகன் பெயர் எப்படி திருச்சிக்கு சூட்டப்பட்டது? - சுவாரஸ்ய தகவல்கள்...!

இந்த குலுக்கல் போட்டியில் தற்போது வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கூப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் 5 கூப்பன்கள் வரை செல்லும் எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

'வீரம்’ காளிதாஸ்

இந்த குலுக்கல் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் வீரம் உணவகத்தில் 61 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி குப்பன்களை எழுதி போட்டு வருகின்றனர்.

ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி :-

அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி பழைய பத்து ரூபாய் நோட்டு போன்று இருப்பதால் பழைய பத்து ரூபாய் கொடுத்து சிக்கன் பிரியாணி பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆஃபர் இங்கே உள்ளது .

மேலும் படிக்க:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

அஜித் நடித்த 61 திரைப்படத்தின் பெயர்களையும் எழுதியும் அவரின் புகைப்படத்தை ஒட்டி ஆல்பம் ஆக தயாரித்து வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி 60 ரூபாய்க்கும் வழங்கி வருகிறார் . இதனால் அந்த கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நடிகர் அஜித்தின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக இவ்வாறு பரிசு போட்டியை நடத்தி வருவதாகவும் , இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாகவும் , விரைவில் நடிகர் அஜித் பெயரில் ஆசிரமம் கட்ட வேண்டும் என்பதை எனது லட்சியம் எனவும் தெரிவித்துள்ளார் கடையின் உரிமையாளர் காளிதாஸ்

Published by:Arun
First published:

Tags: Actor Ajith, Ajith fans, Local News, Theni