ஹோம் /தேனி /

தேனியில் துணிவு டிக்கெட்டை கொண்டு வந்தால் பாதி விலையில் பொருட்கள்.. ஆஃபரை அள்ளிவிடும் அஜித் ரசிகர்

தேனியில் துணிவு டிக்கெட்டை கொண்டு வந்தால் பாதி விலையில் பொருட்கள்.. ஆஃபரை அள்ளிவிடும் அஜித் ரசிகர்

X
துணிவு

துணிவு பேனர்

Theni Ajith fan | தேனியில் துணிவு படத்தின் முதல் காட்சி டிக்கெட்டைக் கொண்டுவருபவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது. இந்தநிலையில்தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள தீவிர அஜித் ரசிகரான காளிதாஸ் தனது உணவகத்துக்கு துணிவு டிக்கெட்டைக் கொண்டுவந்தால் 50 சதவீதம் தள்ளுபடி என்ற ஆஃபரை அறிவித்துள்ளார்.

துணிவு திரைப்படம்

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வீரம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் காளிதாஸ் என்னும் நபர். தீவிர அஜித் ரசிகரான காளிதாஸ்அஜித்தின் 61-வது திரைப்படமான துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான பொழுது தனது உணவகத்தில் குழுக்கள் பரிசு நடத்தி முதல் பரிசாக இருசக்கர வாகனம், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள் உள்ளிட்ட 61 மெகா பரிசை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

துணிவு டிக்கெட் 

அதாவது வீரம் உணவகத்தில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் பரிசு போட்டி நடத்தப்பட்டு ஒரு லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், எல் இ டி டிவி, மிதிவண்டி, வாஷிங் மெஷின், வெட் கிரைண்டர், மிக்ஸி, குக்கர், சோபா செட், உள்ளிட்ட 61 பொருட்கள் பரிசாகவழங்கப்பட்டது.

கடையில் வைக்கப்பட்ட பேனர்

அதுமட்டுமல்லாமல் அஜித் நடித்த 61 திரைப்படத்தின் பெயர்களையும் எழுதிஅவரின் புகைப்படத்தை ஒட்டி ஆல்பம் ஆக தயாரித்து வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி 60 ரூபாய்க்கும் வழங்கினார். கம்பம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் அருகே அமைந்துள்ள வீரம் உணவகத்தின்இரண்டாவது கிளையில்அஜித்தின் உருவ சிலையை திறந்து அஜித் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கடை உரிமையாளர்

துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி பழைய பத்து ரூபாய் நோட்டு போன்று இருப்பதால் பழைய பத்து ரூபாய் கொடுத்து சிக்கன் பிரியாணி பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆஃபர் இங்கே உள்ளது.

துணிவு ஆபர்

இந்த நிலையில் நேற்றுஅஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் துணிவு திரைப்படம் வெளியானது. துணிவு திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் வகையில், தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள வீரம் உணவகத்தின் உரிமையாளரான காளிதாஸ் மீண்டும் ரசிகர்களுக்காக ஒரு புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதாவது துணிவு திரைப்படத்தின் முதல் காட்சியைக்கண்டு களித்த ரசிகர்கள் துணிவு திரைப்படத்தின் டிக்கெட்டை கொண்டு வந்து வீரம் உணவகத்தில் சாப்பிட்டாலோ அல்லது பொருள் வாங்கினாலோ 50 சதவீத தள்ளுபடி வழங்கியுள்ளார்.

ரசிகர் ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 500 ரூபாய் செலுத்தினால் போதும் என்ற ஆபரே அறிமுகப்படுத்தியுள்ளதால் துணிவு திரைப்படத்தை கண்டுகளித்த ரசிகர்கள் வீரம் உணவகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

செய்தியாளர்; சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni