Home /theni /

அதிமுக வசமிருந்த உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியது திமுக..

அதிமுக வசமிருந்த உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியது திமுக..

theni

theni

Theni District: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஜெப்ரின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 வார்டுகளுக்கு கடைசியாக நடைபெற்ற தேர்தலில் அதிமுகவினர் பெரும்பான்மை வைத்து தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.
    இதில் அதிமுகவை சார்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் என்பவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

    இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஜான்சி வாஞ்சிநாதன் மீது மற்ற ஒன்பது உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
    இதனையடுத்து அவர் தனது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பொறுப்பினை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பதவி காலியாக இருந்த வந்தது. துணைத் தலைவராக இருந்த மூக்கம்மாள் பொறுப்பு தலைவராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு அலுவலகத்தின் கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் திமுகவினர் ஆறு நபர்களும் பங்கேற்றனர். மீதமுள்ள அதிமுகவைச் சேர்ந்த 4 நபர்களில் மூன்று நபர்கள் தேர்தலைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    இதனை அடுத்து பெரும்பான்மையாகக் கொண்ட திமுகவைச் சார்ந்த 9வது வார்டு உறுப்பினர் இன்பன்ட் பனிமய ஜெப்ரின் என்பவர் போட்டியின்றி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு தேர்தல் அதிகாரிகள் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அவர் வெற்றி பெற்றதை கொண்டாடினர். மேலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினரும் தேனி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளருமான ராமகிருஷ்ணன் தலைவராக தேர்வு பெற்றவருக்கு தனது பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் உத்தமபாளையம் ஒன்றியத்தைச் சார்ந்த ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி