தேனி மாவட்டம் சின்னமனூர் வட்டாரத்தில் நீடித்த நிலையான வேளாண் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் கண்காட்சி பாரம்பரிய விதைகளை பயிரிட்டு அதிக மகசூல் பெறக்கூடிய ஆலோசனை வழங்கப்பட்டது.
இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தேவையான பாரம்பரிய ரகங்கள் மற்றும் இயற்கை உரங்கள் அந்தந்த விவசாயத் துறை வேளாண்மை விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் இயக்குனர் அழகு நாகேந்திரன் தெரிவித்தார்.
வேளாண் கண்காட்சி முகாமினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வேளாண் துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது இயற்கை வேளாண்மை விவசாயத்துக்கு என்று தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்து உள்ளதாக கூறினார். இக்கண்காட்சியில் தேனி வேளாண்மை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு திட்டங்கள் பற்றிய விளக்கங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். மேலும் இக் கண்காட்சியில் ஏராளமான இயற்கையான உரங்கள், காய்கறி நாற்றுகள் மற்றும் சிறுதானியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது ஏராளமான விவசாயிகள் கண்டுகளித்தனர் .
சின்னமனூர் உதவி வேளாண்மை இயக்குனர் பாண்டி அனைவரையும் வரவேற்றார் .இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் மற்றும் வேளாண் துணை இயக்குனர் தனலட்சுமி சின்னமனூர் நகரமன்ற தலைவர் அய்யம்மாள் ,சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிவேதா அண்ணாதுரை, தேனி மாவட்ட விவசாயிகள் அணி பொறுப்பாளர் சின்னமனூர் ஹக்கீம் மற்றும் ஏராளமான திமுக பிரமுகர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.