முகப்பு /தேனி /

காமயகவுண்டன்பட்டி : சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை கண்காட்சி மூலம் விளக்கிய வேளாண் கல்லூரி மாணவர்கள்

காமயகவுண்டன்பட்டி : சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை கண்காட்சி மூலம் விளக்கிய வேளாண் கல்லூரி மாணவர்கள்

X
வேளாண்

வேளாண் கண்காட்சி  

Theni Small grain food exhibition | சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சியை வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவர்களால் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானிய உணவு கண்காட்சி நடத்தப்பட்டது. வேளாண்மை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு விவசாயம் பற்றிய செயல்முறை அறிவை பெற வேண்டும் என்ற நோக்கில் விவசாய களத்திற்கு சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தின் பல வட்டார அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தி வருகின்றனர்.

தற்போது கல்லூரியின் மாணவர்கள் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு சிறுதானிய உணவு கண்காட்சியை நடத்தி சிறுதானியங்கள் பற்றிய முக்கியத்துவத்தை மாணவ- மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் சிறுதானியங்களின் பயன்கள், முக்கியத்துவம் மற்றும் சிறுதானிய நுகர்வை மக்களிடையே அதிகரிக்க வேண்டியதின் அவசியம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கினர். இந்த கண்காட்சியை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் அபிமன்யு, மாரீஸ்வரன், முத்துகுமார், அருண் பாண்டியன், இன்பரசு, பிரகதிஷ், ராகேஷ் கண்ணன், ஒரின் கெய்த் நடத்தி பார்வையாளர்களுக்கு கண்காட்சியை பற்றி எடுத்துரைத்தனர்

First published:

Tags: Local News, Theni