தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில், 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இருக்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 62 அடியாக குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர், வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டது. இதற்கிடையில், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி வழியாக தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறையினருக்கு அரசு உத்தரவிட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனையடுத்து வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி 690 மில்லியன் கன அடி தண்ணீரை 10 நாட்களுக்குள் வழங்கப்பட உள்ளது.
Must Read : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 4,900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி மொத்தமாக 4,900 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni, Vaigai, Vaigai dam level