Home /theni /

வைகை அணையின் பாசன வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறப்பு 

வைகை அணையின் பாசன வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறப்பு 

வைகை அணை

வைகை அணை

Theni Vaigai Dam | தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில், பாசன வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ளது வைகை அணை.   71 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்துக்காக ஏற்கனவே கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருப்பதால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அணையில் இருந்து தற்போது திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள 1,05,005 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், பாசனத்துக்காக 120 நாட்களில் வைகை அணையில் இருந்து மொத்தம் 8,461 மில்லியன் கனஅடி தண்ணீரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் 45 நாட்கள் தொடர்ச்சியாகவும், மீதமுள்ள நாட்களில் தண்ணீரின் இருப்பை பொறுத்து முறை வைத்து திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அணைக்கு 3,472 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,200 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் வழியாகவும், 2,272 கனஅடி தண்ணீர் ஆற்றிலும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Theni, Vaigai dam level

அடுத்த செய்தி