முகப்பு /தேனி /

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படம் எப்படி இருக்கு? - தேனி ரசிகர்களின் விமர்சனம்

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படம் எப்படி இருக்கு? - தேனி ரசிகர்களின் விமர்சனம்

X
‘வெந்து

‘வெந்து தணிந்தது காடு’

Vendhu Thanindhathu Kaadu | தேனி மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து தேனி மாவட்டம் மக்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்

  • Last Updated :
  • Theni Allinagaram, India

நடிகர் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்கில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மாநாடு திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் நடிகர் சிம்பு இளைஞர், 40 வயது நபர், முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமையான தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு,அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும், ஏ ஆர் ரகுமான் இசையிலும் வெளியாகி உள்ளது. வெந்து தண்ணிந்தது காடு திரைப்படம்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது. சென்சாருக்கு பின்னர் மொத்தம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடக் கூடியதாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமைந்துள்ளது.

தேனியில் வெந்து தணிந்தது காடு :

தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, சின்னமனூர், தேனி, பெரியகுளம் உள்ளிட்ட நகரங்களில் பத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தினசரி நான்கு காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது . கம்பம் பகுதியில் காலை 10.00 மணி முதல் காட்சிக்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்து திரைப்படத்தை காண சென்று , திரைப்படம் முடிந்து வரும் வேளையில் திரைப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  நடிகர் தனுஷ் அழுது கொண்டே சினிமா படப்பிடிப்பிற்கு வருவார்  - கல்லூரி விழாவில் கஸ்தூரிராஜா ருசிகர தகவல்..

ஒரு சிலருக்கு படத்தின் கதை புரியவில்லை எனவும், ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்தால் படத்தின் தெளிவு கிடைக்கும் எனவும், ரசிகர்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.

அதேபோல ஒரு சிலர் படத்தின் கதை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை , ஏ ஆர் ரஹ்மான் இசை நன்றாக இருக்கிறது . ஒருமுறை பார்ப்பது நல்லது எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஒரு சிலர் படம் திரைக்கதை வசனம் பாடல் என அனைத்தும் அருமையாக உள்ளது எனவும் நடிகர் சிம்புவின் நடிப்பு அருமை மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசை அருமையாக உள்ளது எனவும் கே ஜி எஃப் போன்று மாஸாக திரைப்படம் அமைந்துள்ளதாகவும் படம் 100 நாள் ஓடும் எனவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:  பாட்டையா கோவிலும் காமய கவுண்டன்பட்டி வரலாறும்! - யார் இந்த காமய கவுண்டர்?

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது

First published:

Tags: Actor Simbhu, Local News, Theni