முகப்பு /தேனி /

‘நடிகர் கமல் செய்த உதவி..’ - மனம் திறக்கும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்

‘நடிகர் கமல் செய்த உதவி..’ - மனம் திறக்கும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்

X
நடிகர் கமல் செய்த உதவி..’ தேனியில் மனம் திறக்கும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்
            title=

'நடிகர் கமல் செய்த உதவி..’ தேனியில் மனம் திறக்கும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்

Indian wheelchair cricket team | நடிகர் கமல் செய்த உதவி குறித்து தேனியில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பேட்டியளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Theni, India

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் பங்கேற்க தேனி மாவட்டத்தில் பல்வேறு வீரர்கள் பயிற்சி செய்வது வருவதாகவும், இந்திய அணியில் பங்கேற்பதற்கு தேனி மாவட்ட வீரர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியின் பயிற்சியாளரான அப்பாஸ் அலி கூறியுள்ளார்.

இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி :

உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு அடுத்தபடியாக பெரும்பாலான ரசிகர்களால் விரும்பக்கூடிய விளையாட்டுப் போட்டியாக கிரிக்கெட் உள்ளது. குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டின் மீது இந்தியர்களுக்கு அதீத பற்று உள்ளது என்றே கூறலாம். சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளையும் , இந்தியாவிற்குள் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கு ஏராளமான ரசிகர் படை இங்கு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போதைய வீரர்கள் வரை அனைவரையும் அறிந்து வைத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றியும், அணியினரின் விளையாட்டு போட்டிகளைப் பற்றியும் பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றைய சூழலில் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணிக்கு பெரும் ரசிகர் படையே உள்ளது. இந்திய ஆண்களுக்கு கிரிக்கெட் அணிக்கு நிகரான ரசிகர் படை பெண்கள் கிரிக்கெட் அணியினருக்கு உள்ளது என்பதில் மாற்றம் இல்லை.

இந்த சூழலில் சர்வதேச அளவில் விளையாடக்கூடிய இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியும் உள்ளது என்பது இன்றளவிற்கும் பல பேருக்கு தெரியாத ஒன்றாகவே உள்ளது. இந்திய மாற்றுத்திறனாளி அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொரு நாளும் கடும் போராட்டத்திற்குப் பின்பு பல்வேறு சவால்களை சந்தித்து கடுமையான தேர்வின் மூலமே இந்திய அணியில் இடம் பெறுகின்றனர்.

இந்திய அணியில் தமிழக வீரர்களின் பங்கு :

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக தமிழகத்திலிருந்து பல வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளனர். தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு வீரர்கள் உள்ள நிலையில் தேனி மாவட்டத்திலிருந்து அதிக அளவிலான வீரர்கள் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவதாக இந்திய மாற்றுத்திறனாளி அணியின் பயிற்சியாளர் அப்பாஸ் அலி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கீழடி அருங்காட்சியகத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள், பொதுமக்கள்! - செல்பி எடுத்து மகிழ்ச்சி!

இந்திய மாற்றுத்திறனாளிகளின் பயிற்சியாளரான அப்பாஸ் அலி தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி பற்றியும், வீரர்கள் பற்றியும், இந்திய அணிக்கு வீரர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது பற்றியும், தேனி மாவட்டத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் பங்கேற்பதற்காக போராடும் வீரர்கள் பற்றியும் நேர்காணலை நியூஸ் 18 உள்ளூர் தளத்திற்கு வழங்கியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் நடைபெறும் வீரர்கள் தேர்வு :

இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியின் பயிற்சியாளரான அப்பாஸ் அலி கூறுகையில், “என்னுடைய சொந்த மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம். தற்போது இந்திய மாற்றுத் திறனாளிகள் அணியின் பயிற்சியாளராக உள்ளேன். கடந்த 2 வருடங்களாக இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளேன்.

இதற்கு முன்பாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் பயிற்சியாளராக இருந்தேன். தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது துபாயில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது. அதன் அடிப்படையில் இந்திய மாற்றுத் திறனாளிகள் அணியின் பயிற்சியாளராக நான் நியமிக்கப்பட்டேன்.

இந்திய அணிக்கு உதவிய நடிகர் கமல்ஹாசன் :

இன்று சர்வதேச அளவில் இந்திய மாற்றுத் திறனாளிகள் அணி மிகவும் சிறந்த அணியாக விளங்கி வருகிறது. நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அணிகளுடன் பலப்பரீட்சை செய்துள்ளது இந்திய அணி. இந்திய அணி பல வெற்றி சாதனைகளை செய்திருந்தாலும், இந்திய அணி துபாய்க்கு சென்று விளையாட இருந்த சூழலில் போதிய நிதி உதவி இல்லாமல் மிகுந்த சிரமத்தில் இருந்தபோது நடிகர் கமல்ஹாசன் தக்க சமயத்தில் உதவி செய்ததன் மூலம் போட்டியில் பங்கேற்று கோப்பையும் வென்று வந்தோம். அவர் பதிவு செய்த ட்விட்டர் பதிவு எங்களை மேலும் பிரபலமடைய செய்தது. எப்போதும் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணிக்காக உதவ தயாராக இருப்பதாக கூறியது எங்களை பெருமை அடைய செய்தது.

இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியின் வீரர்களை பொருத்தவரை மிகவும் திறமையானவர்கள். குறிப்பாக தமிழகத்தில் இதுவரை மேற்பட்ட வீரர்கள் உள்ள நிலையில் 60 வீரர்கள் மிகவும் திறமையானவர்கள். வீரர்கள் தேர்வு பொருத்தவரை மொத்தம் நான்கு அணி எடுக்கப்படும். தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு அணிகளாக உருவாக்கப்படும். மீண்டும் போட்டியில் நடத்தப்பட்டு அதிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களே இறுதி அணியில் இடம் பெறுவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியை பொறுத்தவரை ஒரு அணிக்கு 15 வீரர்கள் இடம்பெறுவர். பல்வேறு வீரர்கள் மத்தியில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி அணிக்கு 15 வீரர்கள் மற்றும் ஸ்டாண்ட் பை வீரர்கள் 5 பேர் என மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்படுவர்.

மாற்றுத்திறனாளிகள் தேர்வு என்பது பெரும்பாலும் தேனி மாவட்டத்தில் உள்ள தப்பு குண்டு பகுதியில் நடைபெறும். தேனி மாவட்டத்திலிருந்து அதிக அளவிலான வீரர்கள் அணியில் இடம்பெற முயற்சிப்பதால் தேர்வு நேரத்தில் வீரர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். கடைசியாக நடைபெற்ற தேர்வில் நான்கு அணிகளை தேர்வு செய்தோம். தேனி மாவட்டத்தில் வீரர்கள் தேர்வு நடைபெற்றால் மட்டும் தேனி மாவட்டத்திலிருந்து வீரர்கள் பங்கேற்பதில்லை.

எந்த மாவட்டத்திலும் வேறு எந்த பகுதியிலும் வீரர்கள் தேர்வு நடைபெற்றால் அங்கும் தேனி மாவட்ட வீரர்கள் பங்கேற்பது உண்டு. ஏனென்றால் தேனி மாவட்டத்தில் இருந்து வரும் வீரர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது . கூடிய விரைவில் தேனி மாவட்டத்திலிருந்து தமிழக மற்றும் இந்திய மாற்றுத்திறனாளி அணிகளுக்காக வீரர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் சிவா என்பவர் முதன்முறையாக இந்திய மாற்றுத்திறனாளி அணிக்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக வீரர் முதல் முறையாக கேப்டனாக தேர்வு செய்யப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்திய அணிக்காக தமிழகத்தில் இருந்து ஐந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வீரர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் தமிழகத்தில் இருந்து ஐந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது தமிழக வீரர்களின் திறமையை வெளிக்காட்டுகிறது. பல ஆண்டுகளாக இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி ஆதரவு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது BCCI எங்களை டேக் கோவர் செய்துள்ளது. நாங்கள் பிசிசிஐ கீழ் விளையாட உள்ளோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

First published:

Tags: Cricket, Local News, Theni