Home /theni /

நடிகர் தனுஷ் அழுது கொண்டே சினிமா படப்பிடிப்பிற்கு வருவார்  - கல்லூரி விழாவில் கஸ்தூரிராஜா ருசிகர தகவல்..

நடிகர் தனுஷ் அழுது கொண்டே சினிமா படப்பிடிப்பிற்கு வருவார்  - கல்லூரி விழாவில் கஸ்தூரிராஜா ருசிகர தகவல்..

தேனி

தேனி - தனுஷுடன் இயக்குனர் கஸ்தூரி ராஜா

Director Kasturi Raja in Theni | தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள ஹாஜி கர்த்தரவுத்தர் ஹவுதியா கல்லூரியில் திரைப்பட இயக்குனரான கஸ்தூரிராஜா கலந்து கொண்டு, பாமர இலக்கியம் நூல் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் மல்லிங்காபுரத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா  'பாமர இலக்கியம்' என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். தேனியில் பிறந்த கஸ்தூரி ராஜா ஹாஜி கர்த்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் கல்லூரி படிப்பை படித்துள்ளார். பின்னாளில் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனராக உருவெடுத்த கஸ்தூரிராஜா 930 பக்கங்கள் கொண்ட பாமர இலக்கியம் என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

கஸ்தூரிராஜா எழுதிய பாமர இலக்கியம் என்ற நூலின் சிறப்புகளை தேனி மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவும், கல்வி நிலையங்களில் உள்ள மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையிலும் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் கஸ்தூரிராஜா அவர்களின் தலைமையில் மாணவர்கள் மற்றும் கஸ்தூரிராஜா இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

தேனியின் மண் சார்ந்த பல்வேறு தகவல்களுடன் எளிய தமிழில் எழுதிய புத்தகத்தை தேனி மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காகவும் தற்காலத்தில் வளர்ந்து வரும் ஆங்கில மோகத்தை குறைப்பதற்கும் , செல்போன் மற்றும் கணினி போன்ற பொருட்களில் தமிழில் தட்டச்சு செய்து செய்திகளை அனுப்பும் நோக்கத்தை வளர்ப்பதற்காகவும் பாமர இலக்கியம் என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளதாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார் கஸ்தூரிராஜா.

இதையும் படிங்க:  பாட்டையா கோவிலும் காமய கவுண்டன்பட்டி வரலாறும்! - யார் இந்த காமய கவுண்டர்?

சினிமா பயணம் :-

தனது சினிமா பயணம் மற்றும் தனுஷின் முதல் சினிமா பயணத்தை பற்றியும் அவர் பேசினார். தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை திரைப்படம் எவ்வாறு உருவானது? தேசிய விருது பெற்ற தனுஷ் நடிக்க வந்த காரணம் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கும் தனக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விவரித்தார் .

இது குறித்து கஸ்தூரிராஜா கூறுகையில் , " நான் முதலில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் கதையை நாவலாக எழுதி வைத்திருந்தேன். அதை திரைப்படமாக எடுக்கும் எண்ணம் என்னிடம் இல்லை . அந்த நாவலை படித்த செல்வராகவன் வியப்படைந்து இதனை திரைப்படமாக எடுப்பதாக என்னிடம் விருப்பத்தை கூறினார். இந்த நாவலில் சற்று கிளாமர் இருக்கிறது. இதனை எவ்வாறு படமாக எடுப்பது? என செல்வராகவனிடம் கேட்டேன் . தற்போது இதுதான் ட்ரெண்ட் இதனை திரைப்படமாக எடுங்கள் என செல்வராகவன் கூறியதை தொடர்ந்து அதற்கு திரைக்கதை அமைத்து படமாக எடுக்க முடிவு செய்தேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கண்ணாலேயே அனைத்து முக பாவணங்களையும் கொண்டு வரக்கூடிய ஒரு இளைஞர் தேவை . அதற்குப் பல இளைஞர்களை தேடி அலைந்தோம். ஆனால் நான் எதிர்பார்த்த நடிகன் கிடைக்கவில்லை. திடீரென உதயமானது தான் தனுசை நடிக்க வைப்பது என்ற முடிவு.

இதையும் படிங்க:  சில்லென்று கொட்டும் கும்பக்கரை அருவி... தேனியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் தெரியுமா?

முதலில் வேண்டாம் என கூறிய தனுஷ் எனது வற்புறுத்தலின் காரணமாக திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அழுது கொண்டே திரைப்படத்தில் நடிக்க வருவார் . அன்று தொடங்கிய அவரது சினிமா பயனம் இன்று தேசிய விருதில் கொண்டு போய் விட்டுள்ளது. அந்தப் படம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியிலேயே எடுக்கப்பட்டது. என கூறினார்
Published by:Arun
First published:

Tags: Actor dhanush, Local News, Theni

அடுத்த செய்தி