ஹோம் /தேனி /

ஹாரன் சத்தத்தால் ஏற்பட்ட விபத்து - தேனியில் குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலி

ஹாரன் சத்தத்தால் ஏற்பட்ட விபத்து - தேனியில் குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலி

X
தேனி

தேனி விபத்து

தேனி - போடி வணகிரி பண்ணை தீர்த்த தொட்டி அருகில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் ஒரு பெண் மற்றும் சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி - போடி வணகிரி பண்ணை தீர்த்த தொட்டி அருகில்இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் ஒரு பெண் மற்றும் சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகன விபத்து

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள முருக்கோடை பகுதியைச் சேர்ந்த வானதி மற்றும் ராணி அவருடைய மகன் உத்கேஸ்வரன், ருத்ரா ஸ்ரீ ஆகிய நான்கு நபர்களும் இரு சக்கர வாகனத்தில் கேரளா பூப்பாறை நோக்கி சென்றுள்ளனர். மற்றொரு வாகனத்தில் ராணியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

தேனி - போடி செல்லும் வழியில் உள்ள தீர்த்து தொட்டி அருகாமையில் உள்ள வளைவை கடக்கும் பொழுது தேனியில் இருந்து போடி நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்க வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட நான்கு நபர்களில் ராணி பேருந்தின் சக்கரத்தில் தலை சிக்கி சிதைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ராணியின் நான்கு வயது பேத்தி ருத்ரா ஸ்ரீ தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்

பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஜெயபிரகாஷ் விபத்து நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையை தூக்க முற்பட்டுள்ளனர் . ஆனால் குழந்தையின் உயிர் பிரிந்ததால் குழந்தையின் பெற்றோர் உடலை மடியில் வைத்து கதறி அழுத காட்சி அருகில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் படுகாயம் அடைந்த வானதி மற்றும் உத்கேஸ்வரன் ஆகியோரை போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்த பின் தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் .

விபத்தில் உயிரிழந்த ராணி மற்றும் குழந்தை ருத்ராஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் தாமரை குளத்தைச் சேர்ந்த 52 வயதாகும் அய்யனசாமி மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் கூறுகையில் , \" இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வானதி முன்னாள் சென்ற லாரி முந்தி செல்ல முயற்சித்துள்ளார். அதே போல இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த அரசு பேருந்தும் லாரியை முந்தி செல்ல முற்பட்ட போது பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார் .ஹாரன் சத்தத்தில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த வானதி நிலை தடுமாறியதால் பேருந்து எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியதாக கூறினர் .

சபரிமலைக்கு சென்று திரும்பிய கார் குமுளி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து .. 8 ஐயப்ப பக்தர்கள் பலியான சோகம்...

இந்த விபத்தின் உண்மை தன்மை குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இருசக்கர வாகன விபத்தில் பாட்டியும் பேத்தியும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni