ஹோம் /தேனி /

தேனி : ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்

தேனி : ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்

X
ஆதித்

ஆதித் தமிழர் போராட்டம்

Theni | தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆதித் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆதித்தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் முல்லை அழகர் தலைமையிலும் மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலையிலும்இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிலைமலைப்பட்டி அருந்ததியர் மக்களுக்கு மயான பாதை கேட்டு போராடிய ஆதித்தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மீதுவழக்கு பதிவு செய்து கைது செய்தததைக் கண்டித்தும், அப்பகுதி மக்களுக்கு மயான பாதை அமைத்து தரக்கோரியும் ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற்று நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

போராட்டத்தில் கட்சியினர்

தென்காசி மாவட்டம் அரிய நாயகியாபுரம் பள்ளி மாணவன் சீனு மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கட்சியினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், எஸ்டிபிஐ நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், திராவிட கழக நிர்வாகிகள், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள், தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகிகள் சமூக நல்லிணக்க பேரவை நிர்வாகிகள் என ஏராளமேனார் பங்கேற்றனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni