ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் ஆதார் பதிவு முகாம்... எந்த இடங்களில் நடக்கிறது தெரியுமா?

தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் ஆதார் பதிவு முகாம்... எந்த இடங்களில் நடக்கிறது தெரியுமா?

ஆதார் பதிவு முகாம்

ஆதார் பதிவு முகாம்

Theni District News | தேனி மாவட்டத்தில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மின்னணுவியல் கழகத்தின் சார்பில் ஆதார் நடத்தப்படுகின்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மின்னணுவியல் கழகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.

இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அனைத்து நிரந்தர ஆதார் சேவை மையங்களிலும், ஆண்டிப்பட்டி, கடமலை - மயிலை, உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அமைக்கப்பட்ட ஆதார் பதிவு மையங்களிலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இந்த முகாம் தொடங்குகிறது.

வாரத்தின் 6 நாட்களிலும், திங்கட் கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. அதுபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் பதிவு மையத்தில் வாரத்தின் 7 நாட்களிலும் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடக்கிறது.

இதையும் படிங்க : ஸ்கூலுக்கு லேட்.. கடத்தியதாக சிறுவர்கள் பொய்.. கம்பளி விற்ற வடமாநிலத்தவர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்... தேனியில் அதிர்ச்சி சம்பவம்

இந்த சிறப்பு ஆதார் முகாமை பயன்படுத்தி ஆதார் சேவைகளான ஆதார் புதிய பதிவு, 6 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்கள் புதுப்பித்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளலாம்.

தற்போது அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு, அனைவரும் ஆதார் புதுப்பித்து வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலமாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் சரியான ஆவணங்களை தற்போது சமர்ப்பித்து பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni