ஹோம் /தேனி /

கோம்பையில் 5,000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி.. முதல் பரிசை வென்ற உ.பி இளைஞர்..!

கோம்பையில் 5,000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி.. முதல் பரிசை வென்ற உ.பி இளைஞர்..!

X
தேனி

தேனி

Theni Marathon : தேனி மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் முதல் பரிசை உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் தட்டிச்சென்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கோம்பை நகரில் தேனி மாவட்ட காவல்துறை மற்றும் freaks அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான இரு பாலருக்கான மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் 5000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட மாணவர்கள் 12 கிலோ மீட்டர் தூரமும், பெண்கள் 6 கிலோ மீட்டர் தூரமும் ஓட இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு துறை மீது ஆர்வம் குறைவதை தடுத்து, விளையாட்டுத்துறையில் சாதனை புரிய ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவ, மாணவர்கள் முற்றிலும் போதை பொருள் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க மீண்டும் என்பதற்காக நடைபெற்ற இந்த போட்டியில் உத்திரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் பங்குபெற்று முதல் 50 இடங்களை பிடிக்கும் 50 மாணவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000 ரொக்கம், ரூ.10,000 மதிப்புள்ள சைக்கிள், 2ம் இடத்தை பிடிக்கும் மாணவருக்கு ரூ.10,000 ரொக்கம், ரூ.10,000 மதிப்புள்ள சைக்கிள், 3ம் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ரூ.5000 ரொக்கம், ரூ.10,000 மதிப்புள்ள சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

முதல் 50 இடங்களை பிடித்த அனைத்து மாணவர்களுக்கும் ரூ.10,000 மதிப்புள்ள சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் மாணவிகளுக்கு ரூ5000, ரூ.4000, ரூ.3000, ரூ.1000 மதிப்புள்ள கோப்பை முதல் 4 பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கு பெற்று முதலிடத்தை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரின்கு சிங் என்ற நபர் பெற்றுச் சென்றார். இரண்டாம் இடத்தை இந்திய ராணுவத்தை சேர்ந்த துர்கேஷ் குமார் என்ற போட்டியாளர் பெற்றுச் சென்றார்.

மேலும் இந்த போட்டியில் தேனி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரியான பாத்துமா, கோம்பை காவல் நிலையத்தை சேர்ந்த மகேஸ்வரன்,அழகு சங்கர் ஆகியோர் பங்கேற்று போட்டி தூரத்தை நிறைவு செய்தனர். 2வது ஆண்டு நடைபெற்ற இந்த பிரமாண்ட மாரத்தான் போட்டியை கண்டு களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களில் நின்று வீரர்களை ஆர்வமுடன் உற்சாகப்படுத்தி ஊக்குவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், திமுக மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியொட்டி தேவாரம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni