சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட இருந்த அரிய வகை மரமான யானை பிடுக்கு மரம்வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டிருந்தநிலையில் மரத்திலிருந்து இலைகள் துளிர் விட ஆரம்பித்ததால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிசய மரம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் ஆங்கிலேயர் காலத்தில் வளர்த்து பாதுகாக்கப்பட்ட அரிய வகை அழிந்து வரும் பட்டியலில் உள்ள யானை பிடுக்கு மரம் ஐந்து உள்ளன. இந்த மரம் ஆப்பிரிக்கா நாட்டில் கடவுளாக போற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தக் கல்லூரியின் வெளியே போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்திலிருந்து விதைகள் மூலம் ஒரு இளம் மரம் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டது. இந்த மரத்தை சமூக ஆர்வலர்களும் விவசாய சங்கத்தினரும் பாதுகாத்து வளர்த்து வந்தனர்.
இந்த மரம் பிரம்மாண்டமாக வளர்ந்து கல்லூரிக்கு முன்பாக அழகிய தோற்றத்தில் காட்சியளித்த நிலையில் போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்ட பணிகளுக்காக வெட்டப்பட இருந்தது.
இதைத் தொடர்ந்து இந்த மரத்தின் தன்மையை அறிந்த கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் மோகன், ’கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினரிடம் இந்த மரத்தை காப்பாற்றுவது குறித்து முறையிட்டார்.உடனடியாக இந்த மரத்தை கல்லூரிக்குள் இடமாற்றம் செய்வதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டனர்.
வனத்துறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று கடந்த மாதம் டிசம்பர் 9ஆம் தேதி தாவரவியல் பேராசிரியர் மோகன் மற்றும் சமூக ஆர்வலர் உதவியுடன் மரத்திற்கு வைக்கோல் சுற்றப்பட்டு நாட்டு மாட்டு சாணம் பூசப்பட்டு எஸ்காட் இயந்திரத்தால் மரம் வேரோடு எடுக்கப்பட்டு சுமார் 500 மீட்டர் தூரம் தூக்கிச் செல்லப்பட்டு தாய் மரத்தின் நிழலில் நடவு செய்யப்பட்டது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் தாய் மரம் பட்டு போய் இறந்த நிலையில் அதன் அருகில் நடப்பட்ட யானைப்பிடுக்கு மரம் தற்போது துளிர்விட்டு உயிர்ப்பித்துள்ளது.
ஆப்பிரிக்க நாட்டில் கடவுளாக பார்க்கப்பட்ட இந்த மரம் தற்போதுதாய் மரம் இறந்த நிலையில் அதன் பிள்ளை மரம் அதன் நிழல் அடியில் உயிர்ப்பித்ததுஆப்பிரிக்கா நாட்டு மக்களின் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் பேசி வருகின்றனர்.
ஆப்பிரிக்கா நாட்டில் கடவுளாக குலதெய்வமாக பார்க்கப்படும் இந்த மரம் இந்த கல்லூரி வளாகத்தில் தாவரவியல் பேராசிரியர் மோகன் தலைமையான மாணவர்கள் முறையாக பராமரித்து வருகின்றனர்.
சாலை விரிவாக்க பணிகளால் அழிந்து வரும் மரங்களை இதுபோன்று வேறு இடங்களில் நட்டு பராமரித்தால் இயற்கை சூழல் பெருகும். இந்த மரம் காப்பாற்றப்பட்டுள்ளது மாணவர்களுக்கு ஊன்றுகோலாக அமையும் எனவும், இந்த மரத்தில் தற்போது அழகாக கிளைகள் வெளிவந்து பூக்கள் பூத்து உயிர்ப்பித்துள்ளது.இதை அனைவரும் வந்து பார்வையிடலாம் எனவும், கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் கூறியுள்ளார்.
தேனியில் நடந்த மினி மாரத்தான் போட்டி.. பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..
செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni